இலங்கையில் கல்வி சமத்துவமின்மை
Description
அனைவருக்கும் கல்வியை வழங்கும் வகையில் இலங்கையின் கல்வி கொள்கைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அனைவரும் பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் தரமான கல்வியை அடைவது ஒரு சவாலான விடயமாக காணப்படுகின்றது. எனவே பாடசாலைக்குச் செல்வதும் தரமான கல்வி கற்பதும் ஒன்றாகாது. இவ்வாராய்ச்சி, இலங்கையில் உள்ள கல்வி வாய்ப்பு, தரம் மற்றும் கற்றல் விளைவுகளில் இருக்கும் சமத்துவமின்மையின் அளவை பகுப்பாய்வு செய்வதோடு இச்சமத்துவமின்மைக்குப் பங்களிப்புச் செய்யும் காரணிகளையும் ஆராய்ச்சி செய்கின்றது. இவ்வாராய்ச்சி இரண்டாம் நிலைக் கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்ற வேளையில் மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கிடையே உள்ள இடைத்தொடர்புகளையும், பிராந்தியளவிலான பரிமாணங்களின் அனுபவ ரீதியான பகுப்பாய்வையும், கல்வி சமத்துவமின்மை தொடர்பான தேசியளவான கண்ணோட்டத்தையும் வழங்குகின்றது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், ACTED-CEPA (குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வு ) தரவுகள் பண்புசார் நேர்காணல்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான குடித்தனக் கூறின் வருமானம் மற்றும் செலவு பற்றிய கணக்கெடுப்பு போன்றவற்றினை பயன்படுத்தி இவ்வாராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டது.